13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு!!!

0
2342

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, ‘டெட்’ தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும்எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில்வெளியாகும்.

ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள்காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம்பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வுகள் எப்போது பதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள்’ரிசல்ட்’ நாள்

வேளாண் பயிற்றுனர் 25 ஏப்.,ஜூலை, 14 ஆக.,

பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,

கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம்சான்றிதழ் ஆய்வு

ஜூலை உதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15

அக்.,’டெட்’ என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,

*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்..

Annual Recruitment Planner – 2018 – click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here