பாங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபிசர் பணி!!!

0
475

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா 1906ல் நிறுவப்பட்டு 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் ஜெனரல் பேங்கிங் ஸ்டீரீம் பிரிவில் காலியாக இருக்கும் ஆபிசர் (கிரெடிட்) பணியிடங்கள் 158ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2018 ஏப். 1 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக, குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பும், கூடுதலாக பி.ஜி.டி.பி.எம்., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.ஜி.பி.எம்., பி.ஜி.டி.பி.ஏ., போன்ற ஏதாவது ஒரு படிப்பும் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 600. 

கடைசி நாள் : 2018 மே 5. 

விபரங்களுக்கு : www.bankofindia.co.in/english/career.aspx

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here