10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்!!!

0
648

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.

பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, மூன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.மாணவர்களின் இனிஷியல், பெயரில் திருத்தம் இருந்தால் மாற்றி தர, தற்போது கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி வரும், 23ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் துறைஇயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், ‘மதிப்பெண் சான்றிதழ்களில், பிழை இருப்பதாக மனுக்கள் அனுப்பப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும்.’இத்தொகையை, சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும். மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்’ என, கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here