சம்பள முரண்பாடு களைய தனி நபர் குழு!!!

0
347

சம்பள முரண்பாடு களைய தனி நபர் குழு

 
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய, நிதித் துறையின் செலவின பிரிவு செயலர், சித்திக் தலைமையில், தனி நபர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களின், சம்பள முரண்பாடுகளை சரி செய்ய, நிதித் துறையின் செலவின பிரிவு செயலர், சித்திக் தலைமையில், தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு, சம்பள முரண்பாடு மற்றும் சம்பள திருத்தம் குறித்த மனுக்களை ஆய்வு செய்யும்.மேலும், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும்மனுதாரர்களின் கோரிக்கைகளை, தனியாககேட்பதற்கும் முடிவு செய்துள்ளது.அதனால், கோரிக்கை மனுக்களை, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, தனி நபர் குழுவுக்கு அனுப்பலாம். தவிர, omc_2018@tn.gov.in என்ற, இ – மெயில் முகவரிக்கும், மனுக்களை அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here