ஹிந்தி மொழிக்கு ரூ.349 கோடி!!!

0
153

ஹிந்தி மொழியை மேம்படுத்த மத்திய அரசு 3 ஆண்டுகளில் 349 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக, உள் மற்றும் வெளிநாடுகளில் ஹிந்தி மொழியை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு அதிகம் செலவு செய்கிறது. அதன்படி,ஹிந்தி மொழியை மேம்படுத்துவதற்காக 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மட்டுமே 348.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மற்ற மொழிகளுக்கு ஏன் அதே முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதிலை மொழியியல் துறை அளித்துள்ளது. அதில், அரசியலமைப்பின் 343 வது பிரிவின் கீழ் ஹிந்தி ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொழியியல் துறையை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டு துறை தங்களின் மூன்று பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஹிந்தி மொழியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிஎச்டி, சிஐஎச், சிஎஸ்டிடி போன்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டுத்துறை ஹிந்தி மொழியை பயிற்றுவித்து வருகிறது. முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் 2009 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் முதல் 2 மொழிகளுடன் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here