தனியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள்!!!

0
248

இந்தியாவின் நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களைத் 
தனியார்மயமாக்கும் முயற்சியில், அவ்வாறான பொதுத் துறை நிறுவனங்கள் சிலவற்றின் பட்டியலை நிதி ஆயோக் தயாரித்துள்ளது.

எவ்வித வருமானமும் இன்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு, அரசுக்கு அதிக இழப்புகளை வழங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான பட்டியலைத் தயார் செய்து தரும்படி, பிரதமர் அலுவலகத்திலிருந்து அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கிடம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, நலிவுற்ற 40 பொதுத் துறை நிறுவனங்களுக்கான பட்டியலைத் தயாரித்து நிதி ஆயோக் வழங்கியிருந்தது. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் லாபம் ஈட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கான பணியை முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே, இதுபோன்ற நான்கு பட்டியல்களைத் தயாரித்து வழங்கியுள்ளதாகவும், ஐந்தாவது பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். வரும் 2018-19 நிதியாண்டில் நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.80,000 கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இவ்வாறு ரூ.1 லட்சம் கோடி வரையில் ஈட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில், 2018-19ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக ரூ.72,500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here