வாட்ஸ்அப்பில் வந்தாச்சு மேலும் ஒரு புதிய ‘அப்டேட்’!!!

0
359

பிரபல மெசேஜிங் தளமான  வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தினை
இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை ‘டிமோட்’ அல்லது ‘டிஸ்மிஸ்’ செய்யுமாறு புதிய வாட்ஸ்அப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விஷயமொன்றும் உள்ளது.
டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக ‘ஆட்’ செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது.

தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அப்டேட் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here