ராமகிருஷ்ணா மடம் வாயிலாக மாணவர்களுக்கு ஒழுக்க கல்வி!!!

0
230
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், கேந்திரிய வித்யாலயா, நேரு நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் போன்றவற்றில் பாடம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல், நாடு முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

இந்நிலையில், ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்தவர்கள் வாயிலாக, ஒழுக்க கல்வியை கற்பிக்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பது, சக மாணவர்களிடம் சகஜமாக பழகுவது, மற்ற மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளுக்கு கீழ்ப்படிவது என, நற்குணங்களை ஏற்படுத்த, ஒழுக்க கல்வி கற்பிக்கப்பட உள்ளதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here