பள்ளிக்கல்வி துறை உத்தரவு : ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி!!!

0
783
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளில், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவர்களின் பட்டியலை, தயாரித்து அனுப்ப, பள்ளிக் கல்விதுறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அரசின் இந்த உத்தரவால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர் ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவு, கண்டிப்பு போன்ற செயல்களால் தற்கொலைக்கு துாண்டுப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்து உள்ளது.’கடந்த மூன்று ஆண்டுகளில், இவ்வாறு எந்த எந்த பள்ளிகளில், இப்படிப்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.’அதற்கு காரணமான ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்கள் விபரம், அது குறித்த காவல்துறை வழக்குகள், அதன் தற்போதைய நிலை என்ன என்பது போன்ற விபரங்களை… ‘பள்ளி தலைமையாசிரி யர்கள் மற்றும் முதல்வர்கள் சமர்பிக்க வேண்டும்’ என, பள்ளிகல்வித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அவர்கள், அந்தந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துஉள்ளனர். பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காவிட்டாலும், இன்மை அறிக்கையும் கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here