முதல்வர் கணினி விருது; விண்ணப்பிக்க அழைப்பு!!!

0
400

முதல்வர் கணினி விருது; விண்ணப்பிக்க அழைப்பு

Home
 

சென்னை: சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு வழங்கப்படும், முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, அடுத்தாண்டு, ஜனவரி, 2க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலத்திற்கு ஏற்ப, தமிழ் மொழியை, கம்ப்யூட்டரில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, முதல்வர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்க பதக்கம் உடையது.
இந்த ஆண்டு விருதுக்கு, 2014 முதல், 2016க்குள் தயாரிக்கப்பட்ட மென்பொருட்களுடன், தனி நபர், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2018 ஜன., 2க்குள், ’தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை – 8’ என்ற, முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here