தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!!

0
183

தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

 

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும்,
தமிழ் நாட்டு உயர்வுக்கும் அரும்பாடுபட்டுப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று முன் தினம் (அக்டோபர் 31) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களைச் சிறப்பிக்கும் வகையில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற விருதுகளை அறிவித்துள்ளார். அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 15ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திருவிக விருது, முத்தமிழ்க் காவலர் கிஆபெ விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகியவை வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் சுய விவரக் குறிப்புகளுடன் இரண்டு புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர்ப் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை – 600008’ என்ற முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும்,விவரங்களை 044-28190412, 28190413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள்

⦁ திருவள்ளுவர் விருது – புலவர் பா. வீரமணி

⦁ பேரறிஞர் அண்ணா விருது – கவிஞர் கூரம் மு. துரை

⦁ பெருந்தலைவர் காமராசர் விருது – டி. நீலகண்டன்

⦁ மகாகவி பாரதியார் விருது – பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன்

⦁ பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கோ. பாரதி

⦁ தமிழ்த் தென்றல் திருவிக விருது – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

⦁ முத்தமிழ்க் காவலர் கிஆபெ விசுவநாதம் விருது – மீனாட்சி முருகரத்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here