குரூப் – 1 முதன்மை தேர்வு: அக்., 13ல் துவக்கம்!!!

0
254

குரூப் – 1 முதன்மை தேர்வு: அக்., 13ல் துவக்கம்

 
சென்னை: துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, ‘குரூப் – 1’ முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, எட்டு என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் – 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.

இதன் முடிவுகளை, ஜூலை, 21ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,602 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
‘முதன்மை எழுத்துத் தேர்வு, அக்., 13 – 15 வரை, காலை, 10.00 மணி முதல், பகல், 1.00மணி வரை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா அறிவித்து உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here