அக்.15-க்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்!!!

0
284
அக்.15-ஆம் தேதிக்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

தருமபுரியில் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: 8-ஆவது ஊதிய மாற்றத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த வாக்குறுதிபடி, வரும் அக்.15-க்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒன்றரை லட்சம் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும். நிரந்தரமின்றி பணியாற்றி வரும் மூன்றரை லட்சம் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஊராட்சி குடிநீர்த் திட்டப் பணியாளர்கள், சார்-பதிவாளர் அலுவலகங்களில் தாற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here