சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி செயல்படும் அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவதால் அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் எனவும் கூறியுள்ளது. கடந்த 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டியுள்ள நிதி ஆயோக், ஆனால் இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0
200
சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி செயல்படும் அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவதால் அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.

கடந்த 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டியுள்ள நிதி ஆயோக், ஆனால் இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here