கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!!

0
361

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கோபியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here