பி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி!!!

0
268
சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

இவற்றுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 7ல் துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, வந்து சேர வேண்டும். கவுன்சிலிங் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here