‘ஸ்டிரைக்’கில் பங்கேற்பில்லை : ‘டேக்டோ’ திடீர் அறிவிப்பு!!!

0
280
‘ஜாக்டோ – ஜியோ’ நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில், ‘டேக்டோ’ ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என, அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 75சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோ சார்பில், இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது; இதில், 10 லட்சம் பேர் வரை பங்கேற்கதிட்டமிட்டுள்ளனர்.

இதில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘டேக்டோ’ பங்கேற்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஆரோக்கியதாஸ் கூறுகையில், ”ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஆய்வு செய்யும் அமைப்புக்கு, காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் குழுவுக்கும், புதிய தலைவர்நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே, குழுவின் பரிந்துரைகள், விரைவில் வரும் என்பதால், போராட்டத்தில்பங்கேற்கவில்லை,” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here