22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 100% ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள -ஜாக்டோ – ஜியோ வலியுறத்தல் !!!

0
440

அன்புடைய ஆசிரியர்களே – அரசு ஊழியர்களே வணக்கம்

சென்னையில் 5.8.17 அன்று  ஜேக்டோ-ஜியோ சார்பாக   நடைபெற்ற கோரிக்கை பேரணி – ஆர்பாட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அத்துனை நல் உள்ளங்களும், ஏதோ சில காரணங்களால் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் -அரசு ஊழியர்களிடம் 5.8.17 அன்று சென்னையில் நாம் கண்ட நமது ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் எழுச்சியையும் , ஆர்பரிப்புகளையும்  மற்றும்  கோர்க்கையின் 
முக்கியத்துவத்தையும் அச்சு ஊடக செய்திகள் வாயிலாகவும் , காட்சி  ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கட் செவி (Whatsapp ) மூலமாகவும்  தெரிந்திருந்தாலும்  .இருப்பினும் அவர்களுக்குரிய நடையில் நீங்கள் எடுத்துக் கூறுங்கள் .
           மேலும் ,மாநில , மண்டல , மாவட்ட , வட்ட நிர்வாகிகள் நம்மை அழைப்பார்கள் என்று எண்ணாமல் , கோரிக்கைகள் நமக்கானது, எனவே கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக  ஜாக்டோ – ஜியோ அறிவிக்கின்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்ற வகையில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ (அ) பள்ளிகளிலோ உள்ளவர்களிடம்  எடுத்துக்கூறி வருகிற 22-8-17 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  100% ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கலந்து கொணடார்கள் என்ற புதிய போராட்ட வரலாற்றை படைத்திட  வேண்டுகிறேன் .
         நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
        நமது உரிமைகளை மீட்போம் .
      
            
          இவன்
பெ.இளங்கோவன்  & ஜெ.கணேசன்
    தொடர்பாளர்கள்                        ஜாக்டோ – ஜியோ    (JACT TO – GEO ).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here