ஆக.19 முதல் 31 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு !!!

0
336

மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் ஆக., 19 முதல் 31 வரை கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த கல்வி, உடல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், 
தொழில்நுட்பம் தேர்வாளர், செவிலியர் உதவியாளர், குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சிப்பாய் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளை சேர்ந்த ஏற்கனவே ஹவில்தார் பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் ஜூலை 5 முதல் ஆக., 3 வரை விண்ணப்பிக்கலாம். ஆக., 3க்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். முகாமிற்கு வரும்போது இந்த அனுமதி சீட்டை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மதுரை முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகத்தை 0452 –230 8216 ல் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here