19.06.2017 சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!

0
478
*உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்;

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

 *மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20கணினிகள் வழங்கப்படும்; உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் & இதர பணிகள் ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
 *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.
*7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலை உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்- முதலமைச்சர்.
*எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பெயரில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு புதிய கட்டடம்.
 *268 புதிய பாடப்பிரிவுகள் 2017-2018 ம் ஆண்டு தொடங்கப்படும்; இதற்காக  660 பேராசிரியர் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்படும் – முதலமைச்சர்.
 *உயர் கல்வித்துறை அறிவிப்புகள் : 40 கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும்.
 *3090 கிராமப்புற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் SmartClass ஏற்படுத்தப்படும்.
*தமிழகத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
*அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடி செலவில் விரல் ரேகை அச்சுப்பொறி வழங்கப்படும்.
 *கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறு வணிகக்கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here