இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, 79 ஆயிரத்து, 842 விண்ணப்பங்கள் பதிவாகின. இதில், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்த, 12 ஆயிரத்து, 17 கூடுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 67 ஆயிரத்து, 825 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இவர்களுக்கு, 7,954 பள்ளிகளில், இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன் விபரங்களை, www.tnmatricschools.com என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், இன்று பள்ளிகளில் அட்மிஷன் பெறலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.