10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு துவக்கம் !!!

11
2467

அடுத்த ஆண்டு, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு, ஜூன், 5 முதல் விண்ணப்பிக்க வேண்டும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

CLICK HERE TO DOWNLOAD APPLICATION…..

நடப்பு கல்வி ஆண்டில், 1௦ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முறையாக எழுத உள்ளோர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பதிவு செய்து கொள்ளலாம். 2012க்கு முன், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தேர்ச்சி பெறாதோரும்; புதிய பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாதோரும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தனித்தேர்வர்களும், ஜூன், 5 முதல், 30 வரை, மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்களில், பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின், கல்வி அதிகாரியால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்குச் சென்று, செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் வருகை தந்தவர்கள் மட்டுமே, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காதவர்களின், பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்ப படிவத்தை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here