70 லட்சம் ‘செட் – டாப் பாக்ஸ்’ வாங்க முடிவு!!!

0
604

70 லட்சம் ‘செட் – டாப் பாக்ஸ்’ வாங்க முடிவு!!!

தமிழகம் முழுவதும், ‘டிஜிட்டல்’ முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக, 70 லட்சம், ‘செட் – டாப் பாக்ஸ்’ கருவிகளை வாங்க, தமிழக அரசு, ‘டெண்டர்’ கோரிஉள்ளது.
கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பை, டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான உரிமத்தை, தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு, மத்திய
தொலைத்தொடர்பு ஆணையமான, ‘டிராய்’ வழங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களுக்கு, செட் – டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என, டிராய் எச்சரித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த உரிமத்தை, தக்கவைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், 60 லட்சம் செட் – டாப் பாக்ஸ்கள் மற்றும், 10 லட்சம் உயர் ரக செட் – டாப் பாக்ஸ் கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், நேற்று டெண்டர் கோரியுள்ளது. அந்த கருவிகள், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தரப்படும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here