தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு

11
3006

கிடப்பில் போடப்பட்ட, அரசின் தொழில்நுட்ப தேர்வு, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தொழில்நுட்ப தேர்வு முடித்தோர், கூடுதல் பாடப்பிரிவுக்கான சிறப்பு ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுவர். இதற்காக, ஆண்டுதோறும், சிறப்பு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்படும். 2015, நவ.,க்கு பின், மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை.

அதனால், கூடுதல் பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி எடுத்தோர், ஆசிரியர் பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத்தினர், அரசுக்கு மனு அனுப்பினர்; ஏப்., ௧௧ல், தினமலர்  நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, தொழில்நுட்ப தேர்வுக்கான தேதியை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப தேர்வு, அடுத்த மாதம் நடத்தப்படும். இதில் பங்கேற்க, நாளை முதல், ஏப்., 26 வரை, தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஞாயிறு அன்று விண்ணப்ப பதிவு கிடையாது. தபால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படாது. தனியார் பிரவு சிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

11 COMMENTS

  1. Progesterone Legally viagra Equivalent Cialis Pour Femme Zantac Where To Buy Priligy Online Amoxicillin Staph Infection Cephalexin During Pregnancy Buy Kamagra Cheap Cialis Lleida Tablet Lasix Generic Cialis Pricing Get Nexium Cheap Viagra Para Distrofia Muscular Cheap Viagra Tablets Cialis Viagra Vendita Viagra E Cialis Acquisti Generic Deltasone 20mg Posologia Propecia Generico Antibiotic Generic Cephalexin Levitra On Line Para Q Es El Medicamento Cephalexin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here