தமிழகம் முழுவதும் வேலை கிடைக்காமல் தவிக்கும் கணினி அறிவியல் ஆசிரியர்கள்: பரபரப்பு தகவல்கள்

0
590

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், பகுதி நேரம் கூட வேலை கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.  தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது.
அப்போது ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் பாடத்தை மையமாக வைத்து அனைவருக்கும் இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு அச்சடித்த கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள்  கிடப்பில் போடப்பட்டன.

இதனால் மக்கள் வரிப்பணத்தில் ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்று வரை குடோன்களில் உள்ளன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எண்ணிஅதிகளவில் படித்தனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட வழங்கவில்லை. மாறாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிப்ளமோ, பிசிஏ. மற்றும் 3 ஆண்டு படித்த ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாடம் சொல்லிக்கொடுக்க நியமிக்கப்பட்டனர்.பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதனால் பி.எட். படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். .கடந்த 2006ம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடப்பிரிவு இல்லை.   உலகம் கணினி மயமாக வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கணினி கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து, கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும்.மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பி.எட் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கணினி ஆசிரியர்கள் கூறுகையில்,‘‘இன்று  அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் ஏழை, எளிய  மாணவர்கள் தான்.

அரசுப்பள்ளிகளில் இலவச கணினி கல்வி அளிப்பதாகக் கூறி  விட்டு, இலவச லேப்டாப் வழங்கினால் மட்டும் ேபாதாது. ஒவ்வொரு பள்ளியிலும் 2  கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இன்றைக்கு டேட்டா என்ட்ரிக்கு  வெளியில் பணம் கொடுத்து செய்கின்றனர். அதனை தவிர்த்து, அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் போட வேண்டும். அங்ேகயே எங்களைப் போன்ற பி.எட் கணினி அறிவியல்  ஆசிரியர்களுக்குஅரசு வேலை வழங்க வேண்டும்’’ என்றனர்.இதுபற்றி தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச்செயலாளர் குமரேசன் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.

1992ல் இருந்து இன்று வரை தவித்து வரும் இவர்கள், அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.இவர்களுக்கு டெட், டிஆர்பி போன்ற ஆசிரியர் தகுதித்தேர்வும் இல்லை. ஏஇஇஓ., டிஇஓ தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். பட்டம் பெற்ற இவர்களுக்கு அதிலும் வாய்ப்பில்லை. பகுதி நேர சிறப்பாசிரியர் நியமனத்தில் கூட கணினி அறிவியல் பி.எட். படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here