தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்.10ல் தொடக்கம்.

0
347

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.பள்ளியே செல்லா குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களையும் கண்டறிய வேண்டும்.

வகுப்பு மாணவர்களிடம் கருத்துகேட்பு நடத்தி இடைநின்ற குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டறிதல் வேண்டும்.கடந்த ஜூன் முதல் இந்நாள் வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாதவாரியாக சம்மந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here