எரிய துவங்கியது செயற்கை சூரியன்

0
429

ஹைட்ரஜனை உருவாக்கும் புதிய வழிகளை கண்டுபிடிப்பதற்கும், செயற்கையாக சூரியனை பூமியில் உருவாக்குவதற்கும் தொடர்பு உண்டா? உண்டு. எரிபொருட்கள் உண்டாக்கும் மாசுகளால் புவி வெப்பமாகிறது. இதை தடுக்க, மாசு ஏதுமின்றி எரியும் எரிபொருட்களை விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், ஹைட்ரஜனை உருவாக்க முடியுமா என்று ஜெர்மனியின் விண்வெளி ஆய்வு மையமான, டி.எல்.ஆர்., ஆராய்ந்து வருகிறது.
இதற்கென, ‘உலகின் மிகப் பெரிய செயற்கை சூரியனை’ அண்மையில் அவர்கள் ஒளிர விட்டனர். எப்படி? திரைப்படப் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஜெனான் விளக்குகளில், 149 விளக்குகளை நெருக்கமாக வைத்து, அவற்றிலிருந்து வரும் ஒளியை, 20க்கு, 20 என்ற அளவில் குவியச் செய்து ஹைட்ரஜனை உருவாக்க, டி.எல்.ஆர்., விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.அந்த விளக்குகள், குறுகிய குவியப் புள்ளியில் செலுத்தும் ஒளி, பூமிக்கு பலகீனப்பட்டு வந்து சேரும் சூரிய ஒளியின் வெப்பத்தைவிட, 10 ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும்! அதாவது, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம். ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்க புதிய வழிகளை முயற்சி செய்ய, செயற்கை சூரிய வெப்பம் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆராய்ச்சியில் புதுமை ஏதும் விளைந்தால் அது, உலக எரிபொருள் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்பது டி.எல்.ஆர்., விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here