கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி, தத்தளிக்குது அனைவருக்கும் கல்வி திட்டம்!

0
532

தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் ‘அனைவருக்கும் கல்வி திட்ட’ கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. இதனால், ‘முக்கோண சிக்கலில்’ சிக்கி முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) தவிக்கின்றனர்.எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்காக கூடுதல் சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டனர். இதில் மாறுதல், ஓய்வு போன்றவற்றால் காலியான பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

மேலும் 2013 டிசம்பரில், இத்திட்டத்தின் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணித்த 375 மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.இதனால், கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, ‘மாலுமி இல்லாத கப்பல்’ போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி’ திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கும் சி.இ.ஓ., க்களே எஸ்.எஸ்.ஏ., திட்டத்தையும் சேர்த்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், பணிச்சுமை ஏற்பட்டு
மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். தமிழக பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக, 2,656 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு 1,476 கோடி ரூபாய், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கு 1,264 கோடி ரூபாய் வரவேண்டும். ஆனாலும், மாநில அரசு போதிய நிதி ஒதுக்கிய நிலையில், கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.இவர்களிடம் ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். இதன்மூலம் கல்விப் பணிகளில் சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்; தகுதி அடிப்படையில் டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here