‘கியூசெட்’ நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு

0
328

மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, ‘கியூசெட்’ நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, ‘கியூசெட்’ என்ற, மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான தேர்வு, நாடு முழுவதும், 76 இடங்களில், மே, 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், திருச்சி, திருவாரூர், நாகர்கோவில், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. ஏப்., 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணத்தை, ஏப்., 16க்குள் செலுத்த வேண்டும். தமிழகத்தில், திருவாரூரில், மத்திய பல்கலை செயல்பட்டு வருகிறது.

இதில், பிளஸ் 2 முடிக்கவுள்ள மாணவர்கள் மற்றும் பட்டப் படிப்பு மாணவர்கள், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த, எம்.எஸ்சி., – நான்கு ஆண்டு பி.எஸ்சி., – பி.பி.ஏ., மியூசிக் – எம்.பில்., போன்ற படிப்புகளில் சேர, இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here