நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம்

0
568

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம் | தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலி யுறுத்தினர். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே சந்தித்து பேசினார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வலியுறுத்தினார். கடந்த 8-ம் தேதி டெல்லி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன், செயலாளர் சுனில் பலிவால் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்து வலியுறுத் தினர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here