5 மாநில தேர்தல் முடிந்தது: 11 ம் தேதி முடிவு அறிவிப்பு

0
406

லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத்துக்கான தேர்தல் புதன்கிழமை (இன்று) முடிவடைந்தது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன. இன்று இம்மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தலும், மணிப்பூர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றன.

இதில் மணிப்பூரில் 80 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 60.03 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட 5 மாநில தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here