தேனி நியூட்ரினோ திட்டம் – ஆய்வு செய்ய 7 பேர் குழு அமைப்பு

0
358

நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான உறுப்பினர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் குழுவை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. மேலும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாசு கட்டுபாபட்டு வாரியத்தின் பொறியாளர் சேகர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். தேனியில் நியூட்ரினோ திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு பதில் அளிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம் பெற்று உள்ள உறுப்பினர்கள்: சேகர் – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் – அண்ணா பல்கலை கழகம் சுரேஷ் காந்தி – புவியியல் துறை சென்னை பல்கலைக்கழகம் பாலாஜி – ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சிவாஜி – அணுசக்தி துறை பாண்டுரங்கன் – அண்ணா பல்கலை கழகம் நேருகுமார் வைத்திலிங்கம் – அண்ணாமலை பல்கலை கழகம் வழக்கு விபரம் மத்திய அரசு, மிகப்பெரிய அறிவியல் சார்ந்த திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையத்தை, தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம் போடி மலைப் பகுதியில் அமைக்க உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2011ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியைச் சுற்றி பல்வேறு முக்கிய நீராதாரங்கள் உள்ளன. தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மக்களின் அச்சம்.இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ திட்டத்துக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க இருக்கிறோம். அதற்கான அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். அக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அடிப்படையில், அந்த திட்டத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 7 பேர் அடங்கிய ஆய்வுக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையை தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆய்வுக்கு 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கை பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் குழு தொடர்ந்த வழக்கு மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here